பொதுவாக மலிவான விலையில் அதிக ஊட்டச்த்துக்களை கொண்ட காய்கறிகளின் பட்டியலில் பீட்ரூட் முக்கிய இடம் வகிக்கின்றது.
இது அன்றாட உணவில் சேர்க்கப்பட வேண்டிய ஒரு சூப்பர் உணவு என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மேலும் இதில் சோடியம், பொட்டாசியம் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்களும் செரிந்த காணப்படுவமதால், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, வயிறு மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கிறது.
முக்கியமாக அதில் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் இரத்தத்தில் சரியான அளவு ஹீமோகுளோபின் இருக்கும். இதனால் உள் உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் விநியோகம் சிறப்பாக இருக்கும்.
இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் தினசரி உணவில் சிறிதளவு பீட்ரூட்டை சேர்த்துக்கொள்வது சிறந்த பலனை கொடுக்கும்.
இவ்வளவு ஊட்டச்த்துகள் நிறைந்த பீட்ரூட்டில் எப்படி அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில் பெரியல் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வறுத்து பொடி செய்வதற்கு தேவையானவை
சீரகம் – 1 தே.கரண்டி
மல்லி – 1 1/2 தே.கரண்டி
வேர்க்கடலை – 1/4 கப்
கறிவேப்பிலை – 1 கொத்து
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் – 2 தே.கரண்டி
கடலைப் பருப்பு – 1 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
கடுகு – 1 தே.கரண்டி
வரமிளகாய் – 1
கறிவேப்பிலை – 1 கொத்து
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பீட்ரூட் – 300 கிராம் (பொடியாக நறுக்கியது அல்லது துருவியது)
மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – சிறிதளவு
வறுத்த பொடி – 3-4 தே.கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மல்லி, வேர்க்கடலை ஆகிய பொருட்களை போட்டு நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து கறிவேப்பிலை சேர்த்து ஈரப்பதம் போகம் வரையில் நன்றாக வறுத்து இறக்கி குளிரவிட்டு அதனை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து பொடி செய்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்நிறமாக மாறும் வரையில் வறுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதில் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்து தாளித்து,பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில், நறுக்கிய அல்லது துருவிய பீட்ரூட்டை சேர்த்து 2 நிமிடங்கள் வரையில் நன்றாக கிளறி விட்டு, அதனுடன் மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு தூவி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை மூடி நன்றாக 10 நிமிடங்களுக்க வேகவிட வேண்டும்.
அதன் பின்னரி் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு 2 நிமிடம் வரையில் வேக வைத்து இறக்கினால், அருமையான சுவையில் பீட்ரூட் பொரியல் தயார்.