இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிற நிவையில் அங்கு மண்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டதில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 8 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மண்சரிவில் இருந்து தப்பித்த 11 பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேற்கு ஜாவா மாகாணத்தின் பெக்கலோங்கன் பகுதியில் உள்ள 9 கிராமங்கள் நாசமாகின.
தொடர் மழையால் மலையோர குக்கிராமங்களில் மண், பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழுந்ததால் பல கிராமங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.