பொதுவாக ஆரோக்கியமாக வாழ நினைப்பவர்கள் முக்கியமாக நுரையீரலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும். ஏனெனின் நுரையீரல் மனித உடலில் இருக்கும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று.
இது ரத்தத்திற்கு ஆக்சிஜனை வழங்குவதற்கு வேலை செய்கின்றது.
மேலும் நுரையீரல் சேதமடைந்தால் அதன் விளைவு முழு ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இவ்வளவு முக்கியமான நுரையீரல் சேதமடைவதற்கு முன் சில அறிகுறிகள் நம்முடைய உடலில் தோன்றும்.
அந்த வகையில், நுரையீரல் பிரச்சனையை என்னென்ன அறிகுறிகள் மூலம் கண்டறியலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகள்
1. ஏதேனும் கடினமாக வேலை செய்யும் போது மூச்சுத்திணறல் ஏற்படுவது என்பது பொதுவான விடயமாக பார்க்கப்பட்டாலும் சிறிய வேலை செய்தாலும் மூச்சு திணறல் ஏற்பட்டால் அது குறித்து ஆலோசனை எடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக சிலர் அடிக்கடி மூச்சுத்திணறல் பிரச்சனையால் அவதிப்படுவார்கள். அவர்கள் உரிய மருத்துவரை நாடுவது சிறந்தது.
2. இரவில் தூங்கும் போது அடிக்கடி இருமல் வந்தால் அதுவும் நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இந்த அறிகுறி நுரையீரலில் தொற்றி இருப்பதை உறுதிச் செய்கிறது.
3. சிலருக்கு நுரையீரல் மோசமடைய தொடங்கும் போது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். எனவே உங்களுக்கு சிறிது தூரம் நடந்து செல்ல முடியாத நிலை இருந்தால் நுரையீரல் சேதம் இருக்கலாம்.
4. சிலருக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்படும். அப்படியான நிலையில், நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம். இருமலுடன் நெஞ்சுவலியும் இருந்தால் அது நுரையீரலில் தொற்று இருப்பதை உறுதிச் செய்கிறது.