திருகோணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக மூதூரின் தாழ் நிலப்பகுதிகள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன.
குறித்த வெள்ள நீரினை வடிந்து ஓடச் செய்ய மூதூர் பிரதேசபையால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த இரு நாட்களாக, மூதூர் கிழக்கு சாலையூர், கட்டைபறிச்சான், கடற்கரைச் சேனை, சம்புக்களி, சேனையூர் , சம்பூர் உள்ளிட்ட பிரதேசங்களிலும் மற்றும் மூதூர் தெற்கு ஜின்னா நகர், பெரியபாலம் மற்றும் ஜாயா நகர் உள்ளிட்ட சில பிரதான இடங்களிலும் தேங்கிக் காணப்பட்ட வெள்ள நீரினை வெளியேற்ற சபை செயலாளர் நேரடியாக களவிஜயங்கள் மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தார்.