நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி – மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடதும்பர, கஹடகொல்ல பகுதிகளில் மண்சரிவு மற்றும் பாறைகள் விழும் அபாயம் காணப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரவில் இந்த வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் மக்களுக்கு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், இன்று (23) மாலை 6 மணிமுதல் நாளை அதிகாலை 6 மணிவரை தென்னேகும்புர சந்தி மற்றும் ஹசலக பாலம் சந்தியில் மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.