ஒரேஞ்சு தோலில் அசத்தல் துவையல்!

பொதுவாகவே காய்கறிகள் மட்டும் பழங்களில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக ஆரஞ்சி பழத்தில் அதிகளவில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் இது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சரி செய்ய பெரிதும் உதவுகின்றது.

ஆனால் அதனை சாப்பிட்டதும் உடனே தோல்களை நீக்கி குப்பையில் எரிந்து விடுகிறோம். அடுத்த முறை நீங்கள் ஆரஞ்சு பழம் வாங்கும் போது, ​​தோலை தூக்கி வீச தேவையில்லை, ஏனெனில் இதில் நிறைய நன்மைகள் மறைந்திருக்கிறது.

ஆரஞ்சு பழத்தில் தோலில் பாலிபினால்கள், தாவர கலவை உள்ளதால், நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடவும், உடல் பருமனை பராமரிக்கவும் உதவுகிறது.

பழத்தை விட தோலில் பாலிபினால்கள் அதிகளவில் காணப்படுகிறது. ஆரஞ்சு தோல்களில் இருக்கும் எண்ணெய்கள் போன்ற பொருள் தோல் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.

சுவையான இந்த பழத்தின் தோல்களில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால்,செரிமான சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வை கொடுக்கின்றது.

ஆரஞ்சு தோலில் செரிந்து காணப்டுபடும் பாலிபினால்கள் உடல் பருமன் குறைக்கவும் உதவுவதுடன் அல்சைமர் நோய்தாக்த்தில் இருந்தும் பாடுகாப்பு கொடுக்கின்றது.

அப்படி அளப்பரிய ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் ஆரஞ்சி தோலை கொண்டு அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அருமையான சுவையில் எவ்வாறு துவையல் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பொடியாக நறுக்கிய ஆரஞ்சு தோல் – கைப்பிடி அளவு

இஞ்சி – சிறிய துண்டு

காய்ந்த மிளகாய் – 1

உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், அதில் ஆரஞ்சு தோலை நேர்த்து நன்றாக வதக்கிக் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அதே பாத்திரத்தில் எண்ணெய் விட்டு இஞ்சி, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய ஆரஞ்சுத் தோல், இஞ்சி, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து எடுத்தால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரஞ்சுத் தோல் துவையல் தயார்.