பொதுவாக ஒருவருடைய ராசி அவர்களின் எதிர்கால வாழ்க்கையிலும் விசேட குணங்களிலும் ஆதிக்கம் செலுத்துவதை போன்று ஒரு நபரின் பெயர் ஆரம்பிக்கும் முதல் எழுத்தும் அவர்களின் ஆளுமையில் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது.
எண்கணித சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவர் பிறந்த நேரம், நாள் ஆகியவற்றை கருத்தில் கொண்டே பெயர் வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.
எண்கணித சாஸ்திரத்தின் பிரகாரம் பெயர் வைத்தால் அந்த நபரின் வாழ்வில் முன்னேற்றங்களும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் ‘பி’ என்ற எழுத்தில் பெயர் ஆரம்பித்தாால் இந்த நபர்களின் கல்வி, தொழில், காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை மற்றும் அவர்களின் விசேட ஆளுமைகள் எப்படியிருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
B எழுத்தின் சிறப்பியல்புகள்
B எழுத்தில் பெயர் ஆரம்பிப்பவர்கள் இயல்பாகவே மிகவும் உணர்சிவசப்படுவர்களாகவும் தலைமைத்துவ பண்புகள் அதிகம் கொண்டவரை்களதகவும் இருப்பார்கள்.
இவர்கள் பயம் என்ற நாமமே அறியாதவர்கள் எனலாம். கடினமான மூழ்நிலைகளிலும் தங்களின் கவனத்தை சிதறவிடாமல் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.
இவர்கள் காதல் விடயத்தில் பெரிதாக அக்கறை காட்டமாட்டார்கள். ஆனால் காதல் செய்தால் மிகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்துக்கொள்வார்கள்.
அமைதியானதும் மகிழ்சியானதுமான குடும்ப சூழலை மட்டுமே விரும்பும் இவர்கள் சண்டை போடுவதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். முறன்பாடுகளின் போதும் பெரும்பாலும் அமைதியாக இருக்கவே முயற்சிப்பார்கள்.
கஷ்டமான நேரங்கள், மோசமான சூழ்நிலைகளில் மனதுக்கு நெருக்கமானவர்களிடம் அதகை பகிர்ந்துக்கொண்டு ஆறுதல் தேடும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
மற்றவர்களின் துன்பத்தைக் கண்டு அமைதியாக இருக்க விடும்ப மாட்டார்கள். தங்களால் முடிந்தவரை தானம் செய்வதிலும் உதவி செய்வதிலும் அதிக ஈடுபாடு காட்டுவார்கள்.
மற்றவர்களால் இவர்களை எளிதில் புரிந்துக்கொள்ள முடியாது. மனதுக்கு நெருக்கமானவர்ளிடம் மட்டுமே இவர்கள் உணர்வுகளை பகிர்ந்துக்கொள்வார்கள்.
எவ்வளவு கடினமான மூழ்நிலையிலும் தங்களின் லட்சியத்தை நோக்கி பயணிக்கும் ஆற்றல் அவர்களிடம் இருக்கும். பணம் சம்பாதிப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
இயல்பாகவே இவர்களுக்கு நிதி முகாமைத்துவ அறிவு சற்று அதிகமாக இருக்கும். கவலைகளையும் பிரிவுகளையும் அமைதியாக கடந்மு செல்வார்கள்.