வாரத்திற்கு எத்தனை முறை அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இன்று பெரும்பாலான நபர்கள் அசைவ உணவுகளை தான் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். அதிக சத்துக்களைக் கொண்ட இந்த அசைவ உணவை தினமும் சாப்பிடலாமா? என்பது பலருக்கும் தெரியாது.
இதுகுறித்து மருத்துவர் ஒருவர் அளித்துள்ள விளக்கத்தை தெரிந்து கொள்வோம். வாரத்திற்கு எத்தனை முறை, எவ்வளவு அளவு சாப்பிட வேண்டும் என்பதை அசைவ பிரியர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
எத்தனை முறை சாப்பிடலாம்?
நமது உடம்பிற்கு பிரதான சத்து என்றால் அது புரதச்சத்து ஆகும். அசைவ உணவில் புரதச்சத்து அதிகமாக கிடைக்கும் நிலையில், நாம் நமது உடல் எடையைக்கு தகுந்த புரதச்சத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதாவது ஒரு கிலோ உடல் எடைக்கு 0.8கிராம் அளவிற்கு புரதம் எடுத்தக் கொள்ள வேண்டும். அதாவது 60 கிலோ எடையுடைய ஒரு நபர் குறைந்த பட்சம் 48 கிராம் புரதம் எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
நாம் எடுத்துக் கொள்ளும் புரதத்தில் 9 வகையான அமினோ ஆசிட்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். முட்டை இறைச்சி, மீன், பால் பொருட்களில் புரதம் எளிதாக கிடைக்கின்றது.
ஆனால் தானியம், பயிர் வகைகளை சாப்பிடுபவர்களுக்கு இவை அனைத்தும் ஒரே உணவில் கிடைப்பது கிடையாது. அதாவது மூன்று பங்கு தானியத்திலிருந்தும், ஒரு பங்கு பயிர் வகையிலிருந்தும் புரதம் கிடைக்கின்றது.
ஆனால் அசைவம் சாப்பிடுபவர்கள், ஒரு வாரத்திற்கு 700 முதல் 900 கிராம் வரை சாப்பிடலாம். அதாவது ஒரு நாளைக்கு 300 கிராம் வீதம் வாரத்திற்கு 3 தினங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு சுமார் 150 கிராம் அளவில் எடுத்துக் கொண்டால் தினமும் கூட அசைவ உணவினை எடுத்துக் கொள்ளலாம்.