பிக்பாஸ் சீசன் 8-ன் வெற்றியாளர் முத்துகுமரனின் வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நிகழ்ச்சித் தொகுப்பாளரும் பேச்சாளருமான முத்துக்குமரன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார்.
இவர், சிவகங்கையைச் சேர்ந்தவர், முத்துக்குமரனின் தாய் வீட்டு வேலைகள் செய்து, அவரைப் படிக்க வைத்தார். மகன் முத்துக்குமரனுக்கு சிறு வயதிலேயே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார்.
நிறைய புத்தகங்களை வாசித்த முத்துகுமரன் ரேடியா நிகழ்ச்சிகளைக் கேட்டுக் கேட்டு பேச்சுத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். பேசிப் பேசி பழகி, படிப்படியாக பேச்சாளராக மாறினார்.
ஒரு கட்டத்தில் சிவகங்கையில் இருந்து சென்னைக்கு வந்த முத்துக்குமரன், தன்னுடைய பேச்சுத் திறமையால் வாய்ஸ் ஓவர் ஆர்ட்ஸ்டிட்டாக பணியாற்றி வந்துள்ளார். முத்துக்குமரனின் குரல் வளமும் பேச்சாற்றலும் அவருக்கு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
இதனை தொடர்ந்து, பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இது அவரை உலகம் முழுவதும் அறியச் செய்தது. அதன் பின்னர் மேடைகளில் பேச ஆரம்பித்து விட்டார்.
இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பு வந்தது. பிக்பாஸ் வீட்டில் அவரது செயல்பாடுகள் அனைவரையும் கவர்ந்தன. டாஸ்குகளை சிறப்பாகச் செய்து அசத்திய முத்துக்குமரன் ரசிகர்களின் ஆதரவுடன் பைனல் வரை முன்னேறி டைட்டில் வின்னராகவும் மாறினார்.
வாழ்க்கையில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் சாதித்த முத்துகுமரன் மேடையில் வாங்கிய பரிசைக் கூட அவர் முதல் பெண்ணாக மதிக்கும் அவருடைய அம்மாவுக்கே கொடுத்தார்.
அதன் பின்னர் அவருக்கு வாக்களித்து நிகழ்ச்சியில் வெற்றிப் பெற செய்த அவருடைய ரசிகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்து காணொளியொன்றையும் பகிர்ந்துள்ளார்.
முத்துகுமரன் இன்றைய தினம் டைட்டில் வின்னராகவும் லட்சங்களில் புரளும் நபராகவும் இருக்கிறார். இருந்தாலும் அவர் அவருடைய அம்மாவுடன் வசித்த வீட்டின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.