எந்த சனிக்கிழமை ஹனுமனை வழிபட்டாலும், உங்களுக்கு பலன் கிடைக்கும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இருந்தாலும் பல மடங்கு பலனை ஒட்டுமொத்தமாகப் பெற வேண்டும் என்றால், தை மாத சனிக்கிழமை ஹனுமனை வழிபாடு செய்ய வேண்டும். தை மாதத்தில் சூரிய பகவான் மகர ராசியில் இருக்கிறார்.
சூரியன் உச்சம் பெரும் இந்த சமயத்தில், நாம் என்ன வழிபாடு செய்தாலும், அதற்கு நமக்கு பல மடங்கு பலன் கிடைக்கும் என்பதற்காக தான் தை வெள்ளி, தை செவ்வாய், தை அமாவாசை, தை பொவுர்ணமி தைப்பூசம், என்று அனைத்து விசேஷ நாட்களையும் மிக விமர்சையாக கொண்டாடுகின்றோம். ஏன் தை ஒன்றாம் நாள், தை திருநாள் அன்று நாம் கொண்டாடாத பண்டிகையா. சூரியனுக்கு நன்றி தெரிவித்து போற்றும் வகையில் நாம் அனைவருமே இந்த பண்டிகையை விமர்சையாக கொண்டாடுவோம். இப்படி இந்த தை மாதத்தில் வரும் சிறப்புகளை ஒரு பதிவில் அடக்கி சொல்லி விட முடியாது.
ஹனுமன் வழிபாடு
சரி, நீங்கள் நல்ல வேலை கிடைக்காமல் ரொம்பவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா, உங்களுடைய ஜாதக கட்டத்தில் சனிபகவானால் தோஷம் இருக்கிறதா, ராகு கேதுவால் பிரச்சனை இருக்கிறதா, கவலையே படாதீங்க. உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் அனுமன் கோவிலுக்கு செல்லுங்கள். இந்த தை சனிக்கிழமை அனுமன் கோவிலுக்கு சென்று, அனுமனுக்கு 27 வெற்றிலையை மாலையாக கட்டிப் போடுங்கள். 108 முறை ஹனுமனை வளம் வர வேண்டும். ஒரு முறை ஹனுமனை வளம் வந்து, ஹனுமன் முன்பு நின்று நமஸ்காரம் செய்து, “ஜெய் ஸ்ரீ ராம்” என்று சொல்ல வேண்டும். இரண்டாவது முறை சுற்றி வரும்போது, அனுமனை நாமஸ்காரம் செய்து ஒரு முறை “ஜெய் ஸ்ரீ ராம்” சொல்ல வேண்டும்.
இப்படி 108 முறை அனுமனை வளம் வந்து, 108 முறை அனுமனை நமஸ்காரம் செய்து, ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல வேண்டும். கையில் 108 பூக்களை எடுத்துச் செல்லுங்கள். ஏதாவது ஒரு உதிரிப்பூ. அந்த பூவை அனுமன் பாதத்தில் வைத்துவிட்டு, ஜெய்ஸ்ரீராம் சொல்லுங்கள். கணக்கு உங்களுக்கு தெரிந்து விடும். கையில் இருக்கும் பூக்கள் தீரும் போது 108 சுற்றுகள் நிறைவடைந்ததாக அர்த்தம். இந்த தை மாதத்தில் சனிக்கிழமை மட்டும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்துவிட்டால், உங்களை வாழ்க்கையை வெல்ல வேறு யாராலும் முடியாது. அனுமனது பலம் உங்களுக்குள் வந்துவிடும்.
வழிபாட்டை முடித்துவிட்டு சிறிது நேரம் அனுமன் கோவிலில் அமர்ந்து உங்கள் பிரார்த்தனையை அனுமனிடம் வைக்கலாம். பிறகு வீடு திரும்பலாம். ஒவ்வொரு தை சனிக்கிழமையும் உங்களால் இந்த பரிகாரத்தை செய்ய முடியுமா, செய்யுங்கள். வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் எப்படி விலகுகிறது என்று மட்டும் பாருங்கள். இந்த தை மாதம் முடிவதற்குள் உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல விடிவு காலம் பிறந்து விடும். தை மாதம் சனிக்கிழமைகளில் அனுமனை இப்படி கும்பிட்டால் அடுத்த ஒரு வருடத்திற்கு ஜாலியாக இருக்கலாம் பார்த்துக்கோங்க.
திருமணம் நடக்காதவர்கள், வேலை கிடைக்காதவர்கள், வெளிநாடு செல்ல வேண்டுமென்று ஆசை கொண்டவர்கள், கணவன் மனைவியை பிரிந்து இருப்பவர்கள், நன்றாக படிக்காத மாணவர்கள், இப்படி உங்களுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் சரி, இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். அனுமன் உங்களுக்கு வரங்களை வாரி வாரி கொடுத்து விடுவார்.