12 நாள் முடிவில் விஷாலின் மதகஜராஜா படத்தின் மொத்த வசூல்

மதகஜராஜா
நடிகர் விஷால், ஒரு காலத்தில் முன்னணி நாயகனாக ஹிட் படங்களை கொடுத்து வந்தவர்.

இடையில் ஒரு ஹிட் கூட இல்லாமல் தடுமாறியவருக்கு இப்போது செம ஹிட் படம் அமைந்துள்ளது.

அதாவது 12, 13 வருடத்திற்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி என பலர் நடிக்க தயாரான மதகஜராஜா திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இத்தனை வருடங்கள் கழித்து படம் ரிலீஸ் ஆவதால் இப்போது உள்ள மக்கள் படத்தை ஏற்றுக்கொள்வார்களா, ரசிகர்களுக்கு பிடிக்குமா என படக்குழுவினர் யோசித்திருப்பார்கள்.

ஆனால் அந்த பயம் எல்லாம் காணாமல் போகும் அளவிற்கு செம வசூல் வேட்டை செய்து வருகிறது மதகஜராஜா. பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகி 12 நாள் முடிவில் ரூ. 50 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.