காணமல் போயுள்ள பாடசலை மாணவனை தேடும் பொலிசார்!

ஐந்து நாட்களாக காணாமல் போயுள்ள பாடசாலை மாணவன் ஒருவனை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

மாத்தளை, முவன்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவனே காணாமல் போயுள்ளார்.

இந்த பாடசாலை மாணவன் கடந்த 19 ஆம் திகதி மாத்தளை நகரத்திற்குச் சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என மாணவனின் தாயார் இரத்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் உள்ள பாடசாலை மாணவன் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் இரத்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அல்லது 0711647543 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.