நடிகர் விஜய்யின் கடைசி படம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கும் படம் தான் தளபதி69. ஹெச் வினோத் இயக்கி வரும் இந்த படம் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.
இந்த படத்தை முடித்தபிறகு விஜய் 2026 தேர்தலில் போட்டியிட இருப்பதால் இனி முழு நேர அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாக கூறி இருக்கிறார்.
ரிலீஸ் எப்போது
தளபதி69 படம் இந்த வருடம் அக்டோபரில் ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது ரிலீஸ் தள்ளிப்போக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
2026 பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக தளபதி69 ரிலீஸ் ஆக இருப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி இருக்கிறது.