மோட்டர் சைக்கிளில் போதைப் பொருள் விற்பனை இருவர் கைது!

மோட்டார் சைக்கிள்களில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் களுத்துறை பிரதேசத்தில் வசிக்கும் 38 மற்றும் 39 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஐந்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் இருவரும் வெளிநாட்டில் உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரின் தலைமையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பல்வேறு பிரதேசங்களில் வைத்து திருடப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.