அதிக செலவு செய்யும் ராசிக்கார்கள் இவர்கள் தானம்!

ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரங்களின் பிரகாரமே அவர்களின் எதிர்கால வாழ்க்கையும் குணங்களும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அப்படி பிரயோசனம் இன்றி பணத்தை வீணாக செலவு செய்யும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்கள் சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்ப்பவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் நினைத்ததை செய்ய வேண்டும் என்ற குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும். மிகவும் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்.

இவர்களிடம் எப்போதும் தேவைக்கு அதிகமாகவே பணம் வந்துக்கொண்டிருக்கும் ஆனால் அதனை பெரும்பாலான நேரங்களில் வீணாகவே செலவு செய்வார்கள்.

ஆடம்பர வாழ்க்கையின் மீது இவர்களுக்கு இருக்கும் அதிக மோகம் தேவையற்ற விடயங்களில் பணத்தை செலவு செய்ய தூண்டும்.

இவர்கள் மற்றவர்களை சந்தோஷபடுத்துவதை விட தங்களை தாங்களே மகிழ்சிப்படுத்த அதிகம் செலவு செய்வார்கள்.

மீனம்
மீன ராசிகள் செலவழிப்பார்கள் என்பதை விட தங்களின் குடும்பத்துக்கு தேவைக்கு அதிகமாகவே பணத்தை செலவிடுவார்கள்.

அவர்களிடம் எவ்வளவு பணம் வந்தாலும் அதனை சேமிப்பது பற்றியோ அல்லது வருமானம் வரும் வழியில் முதலீடு செய்வது பற்றியோ துளியும் சிந்திக்க மாட்டார்கள்.

அதிகமாக பணம் இருக்கும் நேரங்களில் தங்களின் பொழுது போக்கு அம்சங்களில் செலவு செய்வதோடு, சில நல்ல காரியங்களுக்காகவும் பணத்தை செலவிடுவார்கள்.

கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் விதவிதமான உணவுகளில் அதிகம் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

எனவே உணவுகக்கான அதிக பணத்தை செலவு செய்வார்கள்.மேலும் புதிய மொபைல் அல்லது மின்னணு பொருட்களை வாங்குவதில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள்.

இவர்களுக்கு ஒரு பொருள் பிடித்துவிட்டால் அதை வாங்கும் வரையில் ஓயவே மாட்டார்கள். அது முக்கியமற்ற ஒன்றாக இருந்தாலும் அதற்கு அதிக பணத்தை செலவிடும் குணம் இவர்களிடம் இருக்கும்.