ஆரோக்கியம் நிறைந்த மணத்தக்காளி வத்தக்குழம்பு.

கிராமங்களில் அதிகளில் கிடைக்கூடிய ஒரு காய்கறி வகை தான் இந்த மணத்தக்காளி. மக்காளி போன்று இல்லாமல் வாசணை நிறைந்த சிறிய மிளகு அளவிளான பழங்களை கொண்டருப்தால் இதற்கு மிளகு தக்காளி என்ற பெயரும் உண்டு.

மணத்தக்காளியின் பழங்களை முகத்தில் பூசுவதும் சாப்பிடுவதும் உடல் வெப்பத்தை தணிக்க பெரிதும் துணை

வயிற்றிலும் குடற்பகுதியிலும் உண்டாகும் புண்களைக் குணப்படுத்தும் ஆற்றல் மணத்தக்காளியில் நிறைந்து காணப்படுகின்றது.

வாய்ப்புண் ஏற்பட்டதுமே கிராமங்களில் தேடப்படும் முதல் மூலிகை மணத்தக்காளி தான். இதன் கீரை மற்றும் பழங்கள் இரண்டுக்கும் வயிற்றுப் புண் மற்றும் வாய்ப்புண்களுக்கு அருமருந்தாகும்.

மணத்தக்காளி வத்தல் நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாகும். சிறுநீர் பெருக்கை அதிகரித்து, சிறுநீர்ப்பாதை தொடர்பான நோய்களையும் குணமாக்கும்.

அவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த மணத்தக்காளி வத்தலில் அசத்தல் சுவையில் ஆரோகக்கியம் நிறைந்த வத்தக்குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
மணத்தக்காளி வத்தல் – 100 கிராம்

சின்ன வெங்காயம் – 200 கிராம்(பொடியாக நறுக்கியது)

பூண்டு – 200 கிராம்

நல்லெண்ணெய் – 50 மிலி

கடுகு – 1 தே.கரண்டி

வெந்தயம் – 1 தே.கரண்டி

கறிவேப்பிலை – 1 கொத்து

உப்பு – சுவைக்கேற்ப

மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி

மிளகாய் தூள் – 1 தே.கரண்டி

குழம்பு மிளகாய் தூள் – 2 தே.கரண்டி

வெல்லம் – 1 தே.கரண்டி

புளி – 2 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அதில், வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்நிறமாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் பூண்டு பற்கள் மற்றும் மணத்தக்காளி வத்தலையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதன் பின்பு சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் குழம்பு மிளகாய் தூள் ஆகிய மசாலா பொருட்களையும் போட்டு மிதமான தீயில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

நன்கு வதங்கிய நிலையில் புளித்தண்ணீர் ஊற்றி, சிறிதளவு வெல்லத்தை சேர்த்து கிளறிவிட்டு குழம்பு பாதியாக வற்றும் வரையில் வேகவிட்டு எண்ணெய் பிரியத் தொடங்கியதும், அடுப்பை அணைத்தால், அவ்வளவு தான் அருமையான சுவையில் மருத்துவ குணங்கள் நிறைந்த மணத்தக்காளி வத்தக் குழம்பு தயார்.