பொதுவாகவே நம்மில் பலரும் முட்டையை வேகவைக்கும் தண்ணீரை கீழே தான் ஊற்றுகின்றனர். ஆனால் அவற்றில் நிறைய சத்துக்கள் உள்ளன.
முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்களைப் போல் முட்டையை வேகவைத்த தண்ணீரிலும் கூடி அதிக ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றது. எவ்வாறு இதனை புத்திசாலித்னமாக பயன்படுத்துவது என இந்த பதிவில் பார்க்கலாம்.
முட்டை ஓடுகள் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவில் இருந்து வெளியேறும் ஊட்டச்சத்துகள் முட்டையை வேகத்த தண்ணீரில் கலந்துவிடுகின்றன.
இந்த தண்ணீரில் குறிப்பிடத்தக்க அளவில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சிறிய அளவு பாஸ்பரஸ் மற்றும் இரும்பு ஆகியன காணப்படுகின்றது.
எப்படி பயன்படுத்துவது?
முட்டையை வேகவைத்த தண்ணீரை கீழே வீணாக ஊற்றுவதற்கு பதிலாக தோட்டத்தில் வளர்க்கும் பயிர்களுக்கு ஊற்றுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த தண்ணீரை குளிரவிட்டு அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி தாவரங்களுக்கு வேர்களுக்கு நேரடியாக பயன்படுத்தினால் இவற்றின் வளர்ச்சி செழிப்பாக இருக்கும். கால்சியம் தாவரங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைப்புரிகின்றது.
அந்த தண்ணீரில் இருக்கும் தாதுக்கள் சுத்தம் செய்யவும் பயனுள்ளதாக இருக்கும். வேகவைத்த முட்டை நீரின் கார தன்மை அதிகமாக இருப்பதால், கிரீஸ் மற்றும் அழுக்குகளை சிறப்பாக சுத்தம் செய்கின்றது.
எனவே இந்த தண்ணீரை சமையலறை மேற்பரப்புகளில் அல்லது அடுப்புகளை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்.
மேலும் இந்த தண்ணீரை கொண்டு கூந்தலை அலசினால் முடி ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும். இதனை கேட்பதற்கு வினோதமாக இருந்தாலும் இதில் உண்மையிருக்கின்றது.
முட்டை வேக வைத்த நீரைப் பயன்படுத்தி தலை முடியை சுத்தம் செய்வதால், முடியின் நுண்குழாய்களை வலுப்படுத்தி கூந்தல் உதிர்வை கட்டுத்த முடியும். அதுமட்டுமன்றி பொடுகைக் குறைக்கவும், பளபளப்பான, ஆரோக்கியமான கூந்தலை பெறவும் இந்த தண்ணீரை பயன்படுத்தலாம்.