கிளிநொச்சி(Kilinochchi) – திருநகர் பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்று(25.01.2025) காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கிளிநொச்சி இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக கிளிநொச்சி காவல்துறையினரின் உதவியுடன் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, 10 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதுடன் புதையல் தோண்ட பயன்படுத்திய ஸ்கானர் மற்றும் நீர்ப்பம்பி உள்ளிட்ட உபகரணங்கள் கிளிநொச்சி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.