இந்த 5 மூலிகை செடி வீட்டில் அவசியம் இருக்கனும்

வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டிய மூலிகை செடிகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக நமது உடல்நிலை பிரச்சனை ஏற்பட்டால் நாட்டு மருந்து வாங்குவதற்கு கடைகளுக்கு தான் அதிகமாக செல்கின்றோம். அதற்கு பதிலாக நாம் வீட்டிலேயே சில மூலிகை தாவரங்களை வளர்த்தால் சில நோய்களின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

தற்போது ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் இந்த மூலிகை செடிகள் தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இவை நம்முடைய உடலுக்கு எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

துளசி
இந்து மதத்தில் மிகவும் புனிதமாக கருதப்படும் துளசி இலைகளை பச்சையாகவோ, மூலிகை டீயாகவோ நாம் எடுத்துக் கொண்டால் நல்ல பலனை பெறலாம். துளசிகளில் ஒன்றான கற்பூர துளசியிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் காது பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கின்றது. மேலும் துளசியில் அலர்ஜி, பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், அன்டிபயாட்டிக் பண்புகள் போன்றவை காய்ச்சல், சளி, இருமல், ஜலதோஷம், சுவாசபிரச்சனையிலிருந்து பாதுகாக்கின்றது.

புதினா:
வைட்டமின் ஏ, சி, மாங்கனீஸ் சத்துக்கள் அதிகம் கொண்டு புதினா வீட்டில் வளர்க்க வேண்டிய முக்கியமான மூலிகை செடியாகும். புதினா இலையானது வயிற்று வலி, வாயு, காய்ச்சல், பெருங்குடல் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்துவதுடன், சிறந்த வாய் புத்துணர்ச்சியாகவும் செயல்படுகின்றது.

எலுமிச்சை:
வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் கொண்ட எலுமிச்சையை வீட்டில் வளர்க்க வேண்டும். எலுமிச்சை பழங்கள் மட்டுமின்றி இலைகளும் மருத்துவ பலனை அளிக்கின்றது. மன அழுத்தம், நரம்பியல் பிரச்சனை, உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும், காய்ச்சலை சரி செய்யவும், தொண்டை தொற்றுக்களை குணமாக்கவும், மூச்சுப் பிரச்சனை, மூட்டு வலி, தசை வலி தலைவலி, அடிவயிற்றில் வலி, வயிற்று வலி தசை சுருக்கம் போன்ற பிரச்சனைக்கு தீர்வு அளிக்கவும் செய்கின்றது.

வேம்பு:
பழங்காலத்திலிருந்து மருத்துவத்தில் முதன்மையாக இருக்கும் வேம்பு மரம் வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய மரமாகும். வேப்ப பூ முதல் அதன் பட்டவரையின் அனைத்திலும் மருத்துவ குணங்கள் உள்ளன. முக்கியமாக வேப்ப இலையானது சிறந்த குடற்புழு நீக்கியாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

கற்றாழை:
அற்புதமான செடிகளில் கற்றாழையும் ஒன்றாகும். கற்றாழை செடி வளர்த்தால், கொசு தொல்லை இல்லாமல் இருக்கலாம். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடி வயதாவதை தடுக்க உதவுகிறது.

இதனை நீங்கள் ஜுஸாக எடுத்துக் கொள்ள வேண்டும். செரிமான பிரச்சனை, மலச்சிக்கல், அல்சர், பசியின்மை பிரச்சனையிலிருந்து பாதுகாக்கின்றது. மேலும் இதன் ஜெல், தீக்காயங்கள், புண், அடிபட்ட காயங்கள், முடிவளர்ச்சிக்கும் பயன்படுகின்றது.

இந்த மூலிகைகள் மட்டுமின்றி அஸ்வகந்தா, வெந்தயம், வல்லாரைக் கீரை ஆகியவற்றையும் வீட்டில் வளர்க்கலாம்.