அக்சய் குமார், சாரா அலி கான் நடிப்பில் வெளியாகியுள்ள “ஸ்கை ஃபோர்ஸ்” திரைப்படம் பற்றிய விமர்சனத்தை இங்கே பார்ப்போம்.
கதைக்களம்
1971ஆம் ஆண்டில் இந்திய ராணுவத்திடம் சிக்கும் பாகிஸ்தான் போர் விமான பைலட்டை, விங் கமேண்டர் அக்சய் குமார் விசாரணை செய்கிறார்.
அப்போது 1965ஆம் ஆண்டு பிளாஷ்பேக் ஆரம்பமாகிறது. டேபி என்று அழைக்கப்படும் கிருஷ்ணா விஜயா உயரதிகாரியான ஓம் அஹூஜா (அக்சய் குமார்) தலைமையின் கீழ் போர் விமான பைலட் ஆக இருக்கிறார்.
இருவரும் ஒரு ஆபரேஷனில் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று ராணுவ தளவாடங்களை தாக்குகின்றனர்.
அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் எதிர்பாராத நேரத்தில் இந்திய ராணுவத்தை தாக்க, அதில் சக வீரர்களை அக்சய் குமார் இழக்கிறார்.
இதனால் பாகிஸ்தானின் முக்கிய ராணுவ கிடங்கினை அழிக்க “ஸ்கை போர்ஸ்” எனும் ஆபரேஷனில் அஹூஜா தலைமையிலான படை களமிறங்குகிறது.
அந்த ஆபரேஷனில் என்ன ஆனது? அதன் பின்னர் அஹூஜா, டேபி வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள்தான் படத்தின் கதை.
படம் பற்றிய அலசல்
1971ஆம் ஆண்டு நடந்த இந்தோ-பாகிஸ்தான் போரினை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை சந்தீப் கெவ்லானி, அபிஷேக் அனில் கபூர் ஆகிய இருவரும் இயக்கியுள்ளனர்.
அக்சய் குமார் கமெண்ட் செய்யும் அதிகாரியாக மிடுக்கான தோற்றத்தில் மிரட்டுகிறார்.
ஆக்ரோஷமாக வசனம் பேசும் இடங்களிலும், அமைதியாக உயரதிகாரிகளிடம் தனது இயலாமையை வெளிப்படுத்தும் இடங்களிலும் என நடிப்பில் அசத்துகிறார்.
இந்த அக்சய் குமார் தானா இதற்கு முன் நடித்த படங்களில் நம்மை சோதித்தது என்ற கேள்வியே எழும் அளவிற்கு சட்டிலான நடிப்பை தந்திருக்கிறார்.
அதேபோல் அறிமுக நடிகராக இருந்தாலும் வீர் பஹாரியாவுக்கு (டேபி) நிறைய ஸ்கோப் கொடுத்துள்ளார்.
குறிப்பாக, ஸ்கை போர்ஸ் மிஷனை முடித்து வந்தவுடன் டேபி ரூல்ஸை மீறி விமானத்தை எடுத்து சென்றது தெரிய வரும் இடம் கூஸ்பம்ஸ் மொமண்ட்.
முதல் பாதியில் விமான தாக்குதல் சாகசங்கள் என பரபரப்பாக செல்லும் படம், இரண்டாம் பாதியில் ட்விஸ்ட் மற்றும் எமோஷனல் டிராமாவாக மாறுகிறது.
ஆனாலும், நாட்டுக்காக ரூல்ஸை மீறி செயல்பட்ட வீரருக்கு என்ன ஆனது என்ற கேள்விக்கான விடையை நோக்கி சுவாரஸ்யமான திரைக்கதையில்தான் படத்தை கொண்டு சென்றுள்ளனர்.
டாம் குரூஸின் டாப் கன் மேவ்ரிக் படத்தின் சாயல் பல இடங்களில் தெரிந்தாலும், அப்போதைய இந்திய பொருளாதாரத்தில் திறமையை வைத்து எப்படி நம் ராணுவம் செயல்பட்டது என்பதை காட்டிய விதம் அருமை.
வன்ஷி படத்திற்கு பிறகு நடிகர் அக்சய் குமாருக்கு இது காம்பேக் படமாக இருக்கும்.
க்ளாப்ஸ்
ஆக்ஷன் காட்சிகள்
நடிப்பு மற்றும் வசனம்
நேர்த்தியான திரைக்கதை
பின்னணி இசை
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றுமில்லை
மொத்தத்தில் Sky Force மிஷன் சக்ஸஸ் ஆக முடிந்துவிட்டது. கண்டிப்பாக திரையரங்கில் இப்படத்தை ரசித்து பார்க்கலாம்.
ரேட்டிங் 3.25/5