கமர்ஷியல் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படங்களை இயக்கும் திறமை கொண்டவர் இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான பார்த்திபன்.
கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பின் புதிய பாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனரானார். இதை தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களை இயக்கி வெற்றியை பார்த்த இயக்குனர் பார்த்திபன் இரவின் நிழல் படத்திற்கு பின் டீன்ஸ் என்ற படத்தினை இயக்கினார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பார்த்திபன் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பார்த்திபன் அதிரடி
அதில், ” நண்பர் விஜய்க்கு தற்போது அரசியல் வர வேண்டும் என்ற அவசியமே இல்லை. சினிமாவில் பெரிய ராஜாங்கம் நடத்தி வருகிறார்.
அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்ற நிலையில், அவர் இவை அனைத்தையும் விட்டு மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படி அவர் அரசியல் வந்ததில் சில காரணம் உள்ளது.
அவர் எதோ நல்லது செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவரை தடுத்து நிறுத்துவதற்கு பதிலாக சப்போர்ட் செய்யலாம், மாறுதல் ஒன்றே மாறாதது” என்று கூறியுள்ளார்.