கமல் ஹாசன் இரண்டாவது மனைவி உடைத்த ரகசியம்

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் தற்போது தக் லைஃப் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த ஆண்டு இந்தியன் 3 மற்றும் தக் லைஃப் என இரண்டு திரைப்படங்கள் வெளிவரவுள்ளது.

இதனை எதிர்பார்த்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். கமல் ஹாசன் தனிப்பட்ட வாழ்க்கை ஒரு காலத்தில் பேசும் பொருளாக சினிமா துறையில் இருந்தது.

இவர் ஒரு காதல் மன்னனாக வலம் வந்தார். கமல் ஹாசன் முதல் மனைவியான வாணி கணபதியை விவாகரத்து பெற்ற பின் அதே ஆண்டு சரிகாவை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், திருமணத்தின் போது சரிகா 4 மாதம் கர்ப்பமாக இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இரண்டு குழந்தை பிறந்த பின் இவர்கள் இருவரும் திடீரென விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

உடைத்த ரகசியம்
இந்நிலையில், முன்பு பேட்டி ஒன்றில் சரிகா பகிர்ந்த விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், ” நான் முன்பு எனக்கும் என் அம்மாவுக்கும் நல்லது என தோன்றியதைச் செய்தேன்.

விவாகரத்து முடிவை யாரும் எளிதாக எடுக்கமாட்டார்கள். நான் 60 ரூபாயுடன் என் காரை எடுத்துக்கொண்டு சென்றேன்” என்று கூறியுள்ளார்.