நடிகர் அஜித் தற்போது படங்களில் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸில் அவர் 3ம் இடம் பிடித்து இருந்தார்.
அதனால் அவருக்கு சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் பாராட்டி தள்ளினார்கள்.
பத்ம பூஷன்
இந்நிலையில் அஜித்துக்கு இந்திய அரசு பத்ம பூஷன் விருதை அறிவித்து இருக்கிறது. Art பிரிவில் அவருக்கு விருது வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் 3வது உயரிய விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்துக்கு தற்போது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.