முகப்பரு மற்றும் பருக்கள் பிரச்சனையால் முகத்தின் ஒட்டுமொத்த அழகும் கெட்டு போகும். பருக்கள் சரியாகிய பின்னர் அவற்றின் அடையாளம் முகத்தில் இருக்கும்.
இதன் காரணமாக முகம் மந்தமாக இருக்கும். முகப்பரு மற்றும் பருக்களின் அடையாளங்கள் முகத்தில் இருந்து விரைவாக அகற்றப்படுவதில்லை.
பருக்களை தடுக்க சரியான தோல் பராமரிப்பு நடைமுறை தேவைப்படுகிறது. சிலரின் தோலில் பருக்கள் அடிக்கடி தோன்றும். அத்தகைய நபர்கள் ஒரு தோல் மருத்துவரை அணுகி இந்த பிரச்சனைக்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும்.
சிலருக்கு சாதாரணமாக பருக்கள் வரும். இந்த நபர்கள் தேங்காய் எண்ணையை பயன்படுத்தலாம் அது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
முகப்பரு குறைக்க தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் வைட்டமின் கே மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இத தவிர இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் காணப்படுகின்றன.
இந்த கூறுகள் தோல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகின்றன. இது பருக்களையும் குணப்படுத்துகிறது. தேங்காய் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் குறைந்து சருமம் புத்துயிர் பெறும்.
1. நீங்கள் மேக்கப் போடுபவராக இருந்தால் இரவில் தூங்கும் முன் மேக்கப்பை நீக்கிவிட்டு, பின்னர் க்ளென்சிங் மில்க் கொண்டு முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
பின்னர் தேங்காய் எண்ணெயை எடுத்து, முகத்தில் முகப்பரு அல்லது பருக்கள் அல்லது அவற்றின் புள்ளிகள் இருக்கும் இடங்களில் தடவவும். அந்த இடத்தை விரல் கொண்டு மசாஜ் செய்யலாம்.
2.தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு..ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 3-4 துளிகள் எலுமிச்சை சாறு கலக்கவும். இந்த கலவையை பருக்கள் மற்றும் அவற்றின் கறைகள் மீது தடவவும்.
சில மணி நேரம் கழித்து, தண்ணீரில் முகத்தை சுத்தம் செய்யவும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை செய்தால் முகம் பருக்கள் நீங்கி பொலிவு பெறும்.