இந்த நபர்களுக்கு மட்டுமே ஆபத்தாகும் பப்பாளி!

பப்பாளி மருத்துவ குணம் கொண்ட பழமாகும். இது பழம் சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் சிறந்த நன்மைகளை தரக்கூடியது.

இது பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறமாக சதை நிரம்பிய பழமாக இருக்கும்.பப்பாளியில் நார்ச்சத்து, விட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்கள் நிறைய உள்ளன.

இத தவிர பல நொய்களை குணமாக்கும் சக்தியும் இந்த பப்பாளி பழங்களுக்கு உண்டு. இந்த பதிவில் யார் யார் பப்பாளி பழங்கள் உண்ண கூடாது என பார்க்கலாம்.

பப்பாளி பழம் உண்ண கூடாத நபர்கள்
குறைந்த இரத்த சர்க்கரை அளவு உள்ளவர்கள்

இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க பப்பாளி சாப்பிடுவது நல்லது. ஆனால் இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருப்பவர்கள் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக உள்ளவர்கள் பப்பாளி பழத்தை சாப்பிட்டால், இதய துடிப்பு அதிகரிக்கும்.

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள்

சிறுநீரக கற்கள் இருந்தால், பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பப்பாளியை உட்கொள்வது சிறுநீரக கற்களை பெரிதாக்கும்.

இதனால் சிறுநீரக செயலிழப்பு வரக்கூடும். இந்த நோயை குணப்படத்துவது மிகவும் கடினமாகும்.

ஒவ்வாமையை இருப்பவாகள்

உடலில் ஏதாவது ஒவ்வாமை இருந்தால், தினமும் நாம் சாப்பிடும் உணவில் பப்பாளியை சேர்க்க கூடாது. பப்பாளியில் காணப்படும் சிட்டினேஸ் என்சைம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.

இந்த நொதியின் காரணமாக, உங்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் அல்லது இருமல் ஏற்படலாம்.

கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும்

கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி சாப்பிடக்கூடாது. காரணம் பப்பாளியில் காணப்படும் லேடெக்ஸ் கர்ப்ப காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

இதுபொன்ற பிரச்சனை இருப்பவர்கள் பப்பாளி எடத்தக்கொள்வதை தவிர்க்க வேண்டும். அப்படியும் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையில் சாப்பிடுவது நல்லது.