கனடாவின் பிரபல ராப் இசை கலைஞர் ஹசன் அலி கைது!

கனடாவின் பிரபல ராப் இசை கலைஞர்களில் ஒருவரான ஹசன் அலி கைது செய்யப்பட்டுள்ளார்.

ரொறன்ரோவை மையமாக கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ஹஸன் அலி “டாப் 5” என்ற பெயரில் மேடைகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார்.

ஆயுதங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஒன்றின் அடிப்படையில் ஹசன் அலியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அண்மையில் மார்க்கம் பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இதன் அடிப்படையில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 29 வயதான யாசீன் அலி என்பவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹசன் அலி ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

20 வயதான மாணவர் ஒருவருடைய கொலை தொடர்பில் இவ்வாறு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.