முடிந்தவரை அனைத்து சந்தர்ப்பங்களிலும் தங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்குமாறு அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) அறிவுறுத்தியுள்ளார்.
ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழுக்களின் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், பொதுமக்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்து அவர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு அரசாங்க அமைச்சர்கள் பதிலளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.