பிரித்தானியாவின் பல கடலோர நகரங்கள் 2050 ஆம் ஆண்டுக்குள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காலநிலை மாற்றத்தின் விளைவுகளால், பிரித்தானியாவின் புகழ்பெற்ற கடலோர பகுதிகள் மிகவும் பாதிக்கப்படும் நிலையில் உள்ளன.
இதற்கு முக்கிய காரணமாக புவி வெப்பமடைதல் மற்றும் கடல்மட்ட உயர்வு குறிப்பிடப்படுகின்றது.
(Climate Central) என்ற ஆய்வுக்குழுவின் கணிப்புகளின்படி, பிரித்தானியாவின் பல பிரதேசங்கள் கடல்மட்ட உயர்வால் 2050 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நீரில் மூழ்கக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக லின்கன்ஷைர் மற்றும் நார்ஃபோக் கடலோரங்கள் முழுமையாக நீரில் மூழ்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர் பெருக்கம் எங்கு மிக அதிகமாக இருக்கும் என கணக்கிடும் போது, லண்டனின் தேம்ஸ் நதிக்கரைகள் கடல்மட்ட உயர்வால் சர்பிடன் (Surbiton), கேனரி வார்ஃப் (Canary Wharf), கிரீன்விச் (Greenwich), வெஸ்ட்மின்ஸ்டர் (Westminster) போன்ற பகுதிகள் நீரில் மூழ்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக உலோகவாயுக்கள் வெளியேற்றம், குறிப்பாக போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் உள்ளன இவை கட்டுப்படுத்தப்படாவிட்டால் நீர்மூழ்கும் அபாயம் மேலும் மோசமடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இதனால் காலநிலை மாற்றத்தைத் தடுக்க உலக அளவில் உடனடி நடவடிக்கைகள் அவசியமாகின்றன என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.