தடம்புரண்ட யாழ். ராணி!

யாழ்ப்பாணம் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட யாழ். ராணி புகையிரதம் ஓமந்தை பகுதியில் புகையிரத ஓட்டப் பாதை ஆகிய தண்டவாளத்தை உடைத்து கொண்டு சென்றது.

இதில் நான்கு புகையிரத பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலத்திய போதும் புகையிரத பெட்டிகள் தடம் புரளவில்லை.

பயணிகளிற்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இதே நேரம் வவுனியாவில் இருந்து யாழ்பாணம் நோக்கி புறப்பட்ட புகையிரதம் ஓமந்தையில் தரித்து நின்றது என்பதும் குறிப்பிடதக்க விடயமாகும்.

புகையிரத ஓட்ட வேகத்தினாலேயே இந்த புகையிரத பாதை உடைப்பு இடம்பெற்றதாக கூறப்படுகிறது.