த்ரிஷா சினிமாவை விட்டு விலகுவது உண்மையா?

நடிகை த்ரிஷா சினிமாவில் இருந்து விலகப்போகவதாகவும் முழுநேரம் அரசிலில் ஈடுப்பட உள்ளதாகவும் சில தினங்களாக தொடர்ந்து இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

த்ரிஷா தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் த்ரிஷா.

22 ஆண்டுகளை சினிமாவில் கடந்துள்ள இவர், இன்றும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக தனது இடத்தை தக்கவைத்து வருகின்றார்.

இறுதியாக விஜயின் தி கோட் படத்தில் “மட்ட” பாடலுக்காக நடனமாடியிருந்தார். தற்போது நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார்.

மகிழ்திருமேனியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் எதிர்வரும் 6 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், சில நாட்களாக த்ரிஷா சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுப்பட போவதாக ஒரு தகவல் இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது.

தற்போது, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் த்ரிஷாவின் அம்மாவே அதற்கு பதில் கொடுத்துள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், ” த்ரிஷா அரசியலுக்கு எல்லாம் வரப்போவதில்லை. அவர் சினிமாவில் தொடர்ந்து நடிப்பார். இது தொடர்பாக இணையத்தில் பரவி வரும் தகவல் எதுவும் உண்மை இல்லை” என குறிப்பிட்டு இந்த சர்ச்சைக்கு முடிவுகட்டியுள்ளார்.