இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 4,044 டெங்கு நோயாளர்கள்

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 4,044 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அந்த மாவட்டத்தில் 614 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கடந்த 3 வாரங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கைக்கு அமைய, 19 சுகாதார அதிகாரி பிரிவுகள் அதிகளவில் டெங்கு பரவல் அபாயமிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. (a)