அத்தியாவசிய பொருட்கள் தட்டுபாடு காரணமாக மூடப்படும் நிலையில் உணவகங்கள்

சந்தையில் பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக உணவகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தேங்காய், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பலவற்றுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

எல்லா உணவுப் பொருட்களுக்கும் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது.
தேங்காயின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. சில இடங்களில் அதிகூடிய விலைக்கு வாங்குவதற்குத் தேங்காய்கள் இல்லை.

எனவே இதற்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவக உரிமையாளர்கள் கோரியுள்ளனர்.