யாழில் வெளிநாடு அனுப்புவதாக மோசடியில் ஈடுபட்ட ஆசிரியர் கைது!

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி 68 இலட்ச ரூபார் பண மோசடியில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் நீதிமன்ற உத்தரவில் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் இளைஞனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி , இளைஞனிடம் 68 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார்.

பணத்தினை பெற்ற ஆசிரியர் நீண்ட காலமாக இளைஞனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்காதமையால் , பாதிக்கப்பட்ட இளைஞன், அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளாார்.

அவரின் முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணையின் பின் ஆசிரியரை கைது செய்து யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , இளைஞனிடம் பெற்ற முழு பணத்தினையும் , இளைஞனிடம் கையளிக்கிறேன் என மன்றில் கூறி பணத்தினை இளைஞனிடம் மீள கையளித்தார்.

இதனை அடுத்து , ஆசிரியரை பிணையில் செல்ல அனுமதித்த மன்று வழக்கினை ஒத்திவைத்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.