மற்ற நாடுகளில் வாழும் மக்களை விட ஜப்பானில் இருக்கும் மக்கள் எப்போதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வார்கள். அத்துடன் இவர்களுக்கு ஆயுட்காலம் அதிகம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
அவர்களுக்கு மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறையும், ஆரோக்கியமான உணவு பழக்கங்களும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ வைக்கிறது.
அதிலும் முக்கியமாக, ஜப்பானியர்கள் அவர்களின் உணவில் தினமும் ஒரு பானத்தை சேர்த்து கொள்வார்களாம். இதனால் உலகம் முழுவதும் இந்த பானம் பிரபலமாகவுள்ளது.
அந்த வகையில் தொப்பையுடன் தினமும் போராடுபவர்களுக்கு ஒரு முடிவுக் கொடுக்கும் ஜப்பானிய பானம் குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ஜப்பானிய பானம்
இஞ்சி மற்றும் எலுமிச்சை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பானம் வயிற்றில் உள்ள கொழுப்புக்களை கரைக்கிறது. அத்துடன் உடலில் உள்ள பிரச்சினைகளுக்கும் நிவாரணம் கொடுக்கிறது.
தினமும் குடித்தால் என்ன பலன்?
1. வயது அதிகரிக்கும் போது வயிற்றுப் பகுதியில் கொழுப்பு தேங்கி தொப்பை வர ஆரம்பித்து விடும். இது நாளடைவில் மன உளைச்சலை ஏற்படுத்தும். தொப்பை வந்து விட்டால் அதுவே உடலில் ஏகப்பட்ட பிரச்சினைக்கு காரணமாக அமைந்து விடுகிறது. அப்படியானவர்களுக்கு ஜப்பானிய பானம் நிரந்தர தீர்வு கொடுக்கிறது. இது உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்கிறது.
2. ஜப்பானிய நீரைக் குடிக்கும் ஒருவருக்கு இரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்புகளால் வரும் பிரச்சினைகள் குறைவு. இஞ்சி உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்துகின்றது. அத்துடன் இந்த பானத்தில் பொட்டாசியம் உள்ளது. இது ரத்த குழாய்கள் இருக்கும் அழுத்தத்தை குறைக்கிறது. தினமும் குடித்து வந்தால் இதயம் சார்ந்த பிரச்சினைகள் குறைவாக இருக்கும்.
3. செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் ஜப்பானிய பானம் குடிக்கலாம். இதில் இருக்கும் இஞ்சி மற்றும் எலுமிச்சை நொதியங்களை ஊக்குவித்து செரிமானத்தை சீர்ப்படுத்தும். இதனால் மலச்சிக்கல், அசிடிட்டி, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சினைகள் தடுக்கப்படுகிறது.