யாழில் மின்வாசிப்பாளர் போன்று கொள்ளை!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி அரசடி வீதி பகுதியிலுள்ள வீடொன்றிலுள் நேற்று (28) காலை பெண் ஒருவரிடமிருந்து ஒன்றரைப் பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் காலை 10 மணியளவில் சென்ற இனந்தெரியாத ஒருவர் சில வீடுகளுக்கு சென்று மின்வாசிப்பாளர் போலவும், முகவரி ஒன்றினை விசாரிப்பது போன்று விசாரித்துவிட்டு, இறுதியாக பெண் ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்த வீட்டினுள் நுழைந்து தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளார்.

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.