உலக சந்தையில் எரிவாயு விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்ட போதிலும், பெப்ரவரி மாதத்தில் மக்களுக்கு குறைந்த விலையில் எரிவாயுவை வழங்குவதற்கு தாங்கள் செயற்பட்டு வருவதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் கூறுகிறார்.
dimo academy க்கும் லாஃப் கேஸ் நிறுவனத்திற்கும் இடையே நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், லாஃப் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்றும், தற்போது ஹம்பாந்தோட்டை முனையத்தில் இருபதாயிரம் மெட்ரிக் டன் லாஃப் எரிவாயு உள்ளது எனவும் தெரிவித்தார்.