யாழ் உடுப்பிட்டி தொடர்பான வழக்கு தவணையிடப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணம் (Jaffna) – உடுப்பிட்டி மதுபானசாலை தொடர்பான வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.

குறித்த மதுபானசாலையை அகற்றக் கோரி பிரதேச மக்களால் தொடரப்பட்ட வழக்கு இன்றைய தினம் (29) பருத்தித்துறை நீதிமன்றில் இடம்பெற்றது.

ஜனாதிபதி சட்டத்தரணி எம் .ஏ. சுமந்திரன் குறித்த வழக்கில் முன்னிலையாகியிருந்த நிலையில் எதிர்வரும் (06/03/2025) க்கு தவணையிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பருத்தித்துறையில் மரக்கறி வியாபாரிகளால் சந்தையை புதிய இடத்திற்கு மாற்றுவதை எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று அழைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்கு அடுத்த மாதம் 2ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் வழக்கு தொடருனர்கள் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் முன்னிலையாகியிருந்தார்.

குறித்த மரக்கறி சந்தை தொடர்பான வழக்கு எதிர்வரும் (31/01/2025) அன்று தவணையிடப்பட்டிருந்த நிலையில் நகர்த்தல் பத்திரம் மூலம் இன்று இடம்பெற்றிருந்தது.