பிரபல ஹோட்டலில் மதுபானத்தை திருடி குடிக்கும் குரங்குகள்!

கண்டியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் குரங்குகள் கூட்டம் புகுந்து, ஒரு அறையில் இருந்து படுக்கை விரிப்பையும், சிற்றுண்டிப் பொருட்களையும், உள்நாட்டு மதுபானம் ஒன்றையும் திருடிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

திருடிய பொருட்களை ஹோட்டலின் கூரையில் இருந்து உண்பதையும், அவை செய்யும் சேட்டைகளையும் பிரதேசவாசிகள் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

அந்தப் புகைப்படங்களில் ஒரு குரங்கு மதுபானத்தை ஊற்றுவதையும், மற்றொரு குரங்கு சிந்திய மதுபானத்தை குடிப்பதையும், அருகில் இருந்த மற்றொரு குரங்கு சாப்பிடுவதையும் காட்டுகிறது.