நவீன வசதிகளுடனான புதிய பேருந்துகள்

இலங்கையில் எதிர்காலத்தில் நவீன வசதிகளுடனான 1,000 புதிய பேருந்துகளை இணைப்பதன் ஊடாக பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இதனை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது உள்ள 5,800 பேருந்துகளில் 4,500 பேருந்துகளை மாத்தரமே பாதைகளில் போக்குவரத்துக்காகப் பயன்படுத்த முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

அதோடு , பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க 7,400 பேருந்துகள் அவசியம் என்றும் புறக்கோட்டை மத்திய பேருந்து வளாகத்தில் நடைபெற்ற விசேட ஆய்வின் போது அமைச்சர் மேலும் தெரிவித்தார்.