வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் சமநிலை மற்றும் செழிப்பைக் கொண்டுவருவதில் ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரம் முக்கிய இடம் பெறுகின்றன. இது எதிர்கால சாத்தியக்கூறுகளைப் புரிந்துகொள்வதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கையில் வரும் பல பிரச்சனைகளையும் அவற்றின் சாத்தியமான தீர்வுகளுக்கான பாதையையும் காட்டுகிறது.
இன்றைய காலக்கட்டத்தில், பெரும்பாலான மக்கள் நிதி பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. கடின உழைப்பு மற்றும் முயற்சிகள் இருந்தபோதிலும் பலர் நிதி நெருக்கடியை சமாளிக்கத் தவறிவிடுகிறார்கள். இதற்கு வாஸ்து குறைபாடுகள் முக்கிய காரணமாக இருக்கலாம். வாஸ்து சாஸ்திரத்தின் படி, பொருளாதார முன்னேற்றத்திற்கு வீடு அல்லது பணியிடத்தின் சரியான மேலாண்மை மற்றும் திசை மிகவும் முக்கியமானது. நீங்கள் கடனாளியாக இருந்தால், 2025-ம் ஆண்டில் கடனில் இருந்து விடுபட ஐந்து முக்கிய வாஸ்து பரிகாரங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
திசை: வாஸ்து நிபுணர்களின் கூற்றுப்படி, வீடு அல்லது கடையில் பணத்தை சேமிக்க வடக்கு திசையில் அலமாரியை வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. செல்வம் மற்றும் செழுமையின் அடையாளங்களான குபேரன் மற்றும் லட்சுமி தேவியின் திசை வடக்கு எனக் கூறப்படுகிறது. இந்த திசையில் பணத்தை வைத்திருப்பது நிதி சிக்கல்களைக் குறைப்பது மட்டுமல்லாமல் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் திறனையும் அதிகரிக்கிறது.
லட்சுமி மற்றும் குபேர வழிபாடு: வாஸ்து சாஸ்திரத்தில், வடக்கு திசை மங்களகரமானதாக உள்ளது. லட்சுமி மற்றும் குபேரரின் சிலை அல்லது படத்தை இந்த திசையில் நிறுவுவது மிகவும் பலனளிக்கும். தினமும் காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் நிதி பிரச்சினைகள் நீங்கி வீட்டில் செழிப்பு அதிகரிக்கும். இவ்வாறு செய்வது நிதி ஆதாயத்தை மேம்படுத்தவதோடு மட்டுமல்லாமல், குடும்பத்தில் அமைதியையும் நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கிறது.