வாஸ்து சாஸ்திரத்தின்படி, புத்தர் சிலைகளை வீட்டில் வைப்பதால், அமைதி, நேர்மறை ஆற்றல், நல்லிணக்கம் ஆகியவை வீட்டிற்குள் நுழையும் என்று நம்பப்படுகிறது. இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும்.. அதுமட்டுமல்ல, புத்தர் சிலையை வைப்பதால் இன்னும் பல்வேறு நன்மாற்றஙுகள், ஒவ்வொரு நபரின் மனதிலும் ஏற்படுகின்றன.
அறிவொளி: குறிப்பாக, அமைதி மற்றும் அறிவொளியை பிரதிபலிக்கும், ஆன்மீக உணர்வை புத்தர் சிலைகள் மேம்படுத்தக்கூடியவை.. சமாதானத்தை ஏற்படுத்தக்கூடியவை.. வாழ்க்கை செழிப்பாக இருக் அடிகோடிலிடுகின்றன.. இதனால், பண கஷ்டத்திலிருந்து விடுபடவும் உதவுகின்றன.
அமைதியான முகம் கொண்ட புத்தரின் சிலை முன்பு, நாம் அமர்ந்து தியானம் மேற்கொள்ளும்போது, நம்முடைய மனமும் அமைதிப்பெறும். அத்துட்ன, ஆன்மீக சக்தியையும் நேரடியாகவே அனுபவிக்க முடியும். புத்தர் சிலையை பார்க்கும்போது நம்முடைய மனதிலும் நல்லெண்ணமும் கருணையும் ஏற்படும். எனவேதாதான் வாஸ்து சாஸ்திரத்தில் புத்தர்சிலைக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் இன்றளவும் உலகளவில் இருந்து வருகின்றன. புத்தர் சிலைகள்: ஆனால், புத்தர் சிலையை சரியான முறையில் வைப்பதால் மட்டுமே நேர்மறை ஆற்றல் குடும்பத்தில் அதிகமாகவே கிடைக்கும்.. எனவே சூரிய திசை எனப்படும், கிழக்கில் புத்தரின் சிலையை வைக்க வேண்டும்.. அல்லது வடக்கு நோக்கி வைக்கலாம். இதனால் செழிப்பு, அமைதி, ஒற்றுமை, மகிழ்ச்சி உண்டாகும்.
புத்தர் சிலையில் பல வகைகள் உள்ளன.. ஆனால் எந்த புத்தர் சிலையாக இருந்தாலும், தரையில் வைக்காமல், தரையிலிருந்து 3 முதல் 4 அடி உயரத்தில் வைக்க வேண்டும். கிச்சன், பாத்ரூமில் வைக்கக்கூடாது. ஜன்னல் அல்லது கதவுக்கு எதிரே, படுக்கை அறையில், சிறிய மரச்சாமான்களில், ஃபிரிட்ஜ் உட்பட மின்சாத பொருட்கள் மீது, பெரிய சாதனங்களுக்கு பக்கத்தில், ஸ்டோர்ரூம், என இப்படி எங்கேயுமே வைக்கக்கூடாது
வெளிச்சம், தூய்மை: காரணம், புத்தர் சிலை வைக்கும் இருப்பிடம், அதன் மதிப்பை அதிகரிக்க வேண்டும். புத்தர் சிலை உள்ள இடம் வெளிச்சமாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். வெறுமனே சிலை வைக்காமல், பித்தளை, அல்லது பீங்கான் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில், சில பூக்களை போட்டு, புத்தர் சிலையை வைக்கலாம் வாஸ்து சாஸ்திரத்தில் மங்களகரமான நிறம்கொண்ட வெள்ளை, மஞ்சள் , பழுப்பு நிறங்களில் புத்தர் சிலை இருக்கலாம்.. வாஸ்து சாஸ்திரத்தில் மங்களகரமான நிறம்கொண்ட வெள்ளை, மஞ்சள் , பழுப்பு நிறங்களில் புத்தர் சிலை இருக்கலாம்.. பல மருந்து புத்தர்கள் நீல நிறத்தில் இருக்கும். இந்த சிலைகளை வைத்தால், ஆரோக்கிய குறைபாட்டிலிருந்து மீளலாம்.
பூஜையறை: புத்தர் சிலையை பூஜையறையில் வைத்து வணங்கலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம். ஆதிசங்கரர், ராமானுஜர், ராகவேந்திரர், சாயிபாபா, இயேசுபிரான் போன்று புத்தரும் மனிதராக வாழ்ந்து இறைநிலையை அடைந்தவர் என்பதால், புத்தர் சிலையை பூஜை அறையில் வைத்து வணங்கலாம் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.. மகான்கள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் சொன்ன கருத்துகளை முடிந்தவரை நம் வாழ்வில் கடைபிடித்து வரவேண்டும் என்பதே முக்கியம் என்றும் அறிவுறுத்துகிறார்கள். புத்தர் சுவர் ஓவியங்களையும் வீட்டில் வைக்கலாம்.. காரணம், புத்தர் சுவர் ஓவியமும், நல்ல ஆற்றலையும் செழிப்பையும் ஈர்க்கக்கூடியவை.. அதனால், வீட்டின் பிரதான நுழைவாயில் ஓவியங்களை வைக்கலாம். இதனால், எதிர்மறை ஆற்றல்களையும் வீட்டிற்குள் நுழைவதை புத்தர் சுவர் ஓவியம் தடுத்துவிடும்.
ஓவியங்கள்: வடக்கு மற்றும் வடகிழக்கு ஆகியவை புத்தர் ஓவியங்களுக்கு சிறந்த வாஸ்து இடமாகும்.. இந்த திசைகள் வாஸ்து சாஸ்திரத்தின்படி மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது… புத்தர் ஓவியங்கள் மனதிற்கு அமைதி, சாந்தத்தை தருகின்றன..