இரத்தினபுரியின் எலபாத பகுதியில் களனி பல்கலைக்கழக பட்டதாரியான 29 வயதான சந்திமா ஹர்ஷனி குணரத்ன, தனது முன்னாள் காதலனால் படுகொலை செய்யப்பட்ட துயர சம்பவம் தொடபில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் கொலை சம்பவம் ஜனவரி 29, ஆம் திகதி அவரது வீட்டில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முன்னாள் காதலனால் பலியான இளம் யுவதி; வெளிவந்த பகீர் தகவல்கள் | Graduate Student Murdered By Ex Boyfriend
வீட்டிற்குள் ரகசியமாக நுழைந்த முன்னாள் காதலன்
இரத்தினபுரியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஓரு அதிகாரியாகப் பணிபுரிந்த சந்திமா, சம்பவம் நடந்த அன்று காலையில் தனது தாயாருடன் சமைத்துக்கொண்டிருந்துள்ளார்.
பொலிஸ் விசாரணைகளின்படி, தாய் தற்காலிகமாக சமையலறையை விட்டு வெளியேறியபோது சந்தேக நபர் வீட்டிற்குள் ரகசியமாக நுழைந்து , சந்திமாவின் பின்னால் நெருங்கி, மீன் கத்தியால் அவள் தொண்டையை அறுத்து, கொன்றுள்ளார்.
முன்னாள் காதலனால் பலியான இளம் யுவதி; வெளிவந்த பகீர் தகவல்கள் | Graduate Student Murdered By Ex Boyfriend
சம்பவம் நடந்ததற்கு முந்தைய நாள் இரவு சந்தேக நபர் தெல்லபட பகுதியில் உள்ள மூடப்பட்ட பள்ளி கட்டிடத்தில் தங்கியிருந்து அதிகாலையில் வீட்டுக்குள் நுழைந்துள்ளமை காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது ஒரு திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சந்தேக நபர் பல சந்தர்ப்பங்களில் ஹர்ஷனியின் வீட்டிற்கு வந்து போயுள்ளார். இந்நிலையில் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய கயான் என்ற ஆசிரியர் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதுடைய ஆசிரியர் கைது
அவர் இரத்தினபுரிக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் டியுசன் வகுப்புகளை நடத்தி வந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
கொலைக்குப் பிறகு, சந்தேக நபர் விஷம் குடித்துவிட்டு, ஒரு வயலில் கிடந்த பிரதேசவாசிகள் இரத்தினபுரி பொது மருத்துவமனையில் சேர்த்துள்ள நிலையில் , நீதிமன்ற உத்தரவின்படி சிறைக் காவலர்களின் பாதுகாப்பின் கீழ் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இறந்த பெண்ணின் தந்தை, கே.குணரத்ன சந்தேக நபருடனான தனது உறவை தனது மகள் கைவிட்டதாக கூறுகிறார். சந்தேக நபர் தனது மகளிடம் உறவை மீண்டும் தொடங்க பல சந்தர்ப்பங்களில் கேட்டிருந்தார், எனினும் சந்தேக நபரின் நடத்தை சரியில்லை என்பதால் மகள் மறுத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது தொடங்கிய காதல் விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் போனதாலும், பாதிக்கப்பட்டவருக்கு வேறு உறவுகள் இருந்ததாக சந்தேகம் எழுந்ததாலும் இந்தக் கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.