எந்த வேண்டுதலாக இருந்தாலும் நிறைவேறும் நாள்!

நம் ஒவ்வொருவருக்கும் இஷ்ட தெய்வம் என்ற ஒன்று இருக்கும். அந்த தெய்வத்திடம் நாம் வழிபாடு செய்து நம்முடைய வேண்டுதலையும், கோரிக்கையும் வைப்போம். இப்படி வைப்பதன் மூலம் அந்த தெய்வத்தின் அருளால் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் ஒரு சிலருக்கு எத்தனை முறை வேண்டுதல் வைத்தாலும் அந்த வேண்டுதல் நிறைவேறாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் மனம் வருந்தி இருப்பார்கள். அந்த வருத்தத்தை போக்கக்கூடிய ஒரு நாளாக எந்த நாள் திகழ்கிறது என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எப்பேர்ப்பட்ட வேண்டுதலையும் நிறைவேறும் நாள்

ஒவ்வொருவருக்கும் இஷ்ட தெய்வமும், குலதெய்வமும் இருக்கும். இவர்களோடு சேர்த்து மற்றும் ஒரு தெய்வம் இருக்கும். அந்த தெய்வம் தான் நம்முடைய ராசி நட்சத்திரத்திற்குரிய தெய்வமாக திகழக்கூடியவர்கள். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதிபதியாக ஒரு கிரகம் இருக்கும், அந்த கிரகத்திற்கு அதிபதியாக ஒரு தெய்வம் இருப்பார்கள். அந்த தெய்வம் எந்த தெய்வம் என்பதை தெரிந்து கொண்டு நம்முடைய நட்சத்திரத்திற்குரிய தெய்வத்தை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும். முதலில் நம்முடைய ஜாதகத்தில் நமக்கு சாதகமாக இருக்கக்கூடிய தெய்வம் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு நம்முடைய நட்சத்திரத்திற்குரிய தெய்வம் யார் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் நம்முடைய பிறந்த நட்சத்திரம் என்பது வரும். அப்படி வரக்கூடிய அந்த நாளில் அந்த நட்சத்திரத்திற்குரிய தெய்வம் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.

பிறகு அங்கு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் அந்த நெய் பசு நெய்யாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் வேண்டுதல் நிறைவேறும். அப்படி தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு நம்மால் இயன்ற பொருளை அந்த தெய்வத்திற்கு வாங்கி தர வேண்டும். அபிஷேக பொருளாக இருக்கலாம், மலர்களாக இருக்கலாம், பிரசாதமாக இருக்கலாம், வஸ்திரமாக இருக்கலாம், எது நம்மால் முடியுமோ அதை வாங்கி கொடுத்து அந்த தெய்வத்திடம் நம்முடைய வேண்டுதலை வைத்தோம் என்றால் விரைவிலேயே அந்த வேண்டுதல் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய ஜென்ம நட்சத்திரம் வரக்கூடிய நாள் என்பது மிகவும் சிறப்புக்குரிய நாளாகவே திகழ்கிறது. ஊசி முனையில் தவம் செய்த காமாட்சியை கூட சிவபெருமான் ஆட்கொண்டது காமாட்சியின் ஜென்ம நட்சத்திரம் வரக்கூடிய நாள் அன்றுதான் என்று புராணங்கள் கூறுகிறது. அதனால் ஜென்ம நட்சத்திர நாளன்று நாம் செய்யக்கூடிய வழிபாடு விரைவிலேயே நிறைவேறும் நல்ல பலனைத் தரும் என்று கூறப்படுகிறது.

இயன்றவர்கள் தங்களுடைய நட்சத்திரத்திற்குரிய தெய்வத்தின் நாமங்களையோ அல்லது அஷ்டகத்தையோ பாராயணம் செய்வது என்பது மிகுந்த பலனை தரும். இதையும் படிக்கலாமே:நினைத்தது நடக்க தைப்பூசம் விரதம் மிகவும் எளிமையான அதே சமயம் சூட்சுமமான இந்த வழிப்பாட்டு முறையை முழு நம்பிக்கையுடன் பின்பற்றுபவர்களுக்கு விரைவிலேயே அவர்களுடைய வேண்டுதல் நிறைவேறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.