அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திற்கு அருகே 10 பேருடன் சென்ற விமானம் ரேடாரில் இருந்து தொடர்பிழந்து போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெரிங் ஏர் விமானம் 445 ரக விமானம் வியாழக்கிழமை பிற்பகல் பெரிங் கடலுக்கு மேலே நோம் நகரத்திற்கு செல்லும் பாதையில் பறந்து கொண்டிருந்தபோது காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போன விமானத்தில் 9 பயணிகள் மற்றும் 1 விமானி உட்பட 10 பேர் பயணம் செய்ததாக அலாஸ்கா மாநில இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காணாமல் போன விமானத்தை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்