பொதுவாக நமது வீடுகளில் வாங்கும் பொருட்களில் கூட சாஸ்த்திரம் உள்ளது.
அதாவது குறிப்பிட்ட தினங்களில் சில பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. மீறி வாங்கும் பொழுது வீட்டில் பணப்பிரச்சினை வரக் கூடும்.
அந்த வகையில், எந்த கிழமைகளில் வீட்டு துடைப்பம் வாங்கக் கூடாது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
துடைப்பம் வாங்கும் கிழமை
வீட்டு துடைப்பம் என்பது அதிர்ஷ்டம் கொண்டு வரும் ஒரு பொருளாக இந்து மக்கள் பார்க்கிறார்கள்.
வீட்டிலுள்ள பழைய துடைப்பம் மிகவும் பழுதாகி விட்டது என்றால் புது துடைப்பத்தை செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை ஆகிய கிழமைகளில் வாங்கலாம். இப்படி செய்து வந்தால் லட்சுமி தேவியின் நல்லாசி வாழ்வில் நிலைத்திருக்கும்.
வாங்கிய துடைப்பத்தை நம் இஷ்டப்படி வீட்டில் எல்லா இடங்களிலும் வைக்கக் கூடாது. வீட்டில் செல்வம் பெருக வேண்டுமானால் வீட்டின் மேற்கு அல்லது வடமேற்கு திசையில் மாத்திரமே துடைப்பம் வைக்க வேண்டும்.
இப்படி செய்து வந்தால் வீட்டிலுள்ள எதிர்மறையான ஆற்றல்கள் நீங்கி, நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும். எப்பொழுதும் கிழக்கு மற்றும் வட கிழக்கு ஆகிய திசைகளில் துடைப்பம் வைக்கக் கூடாது.
அதிர்ஷ்டம் வருமா?
அதே சமயம், வாரத்தின் இரண்டாவது நாளான திங்கட்கிழமைகளில் துடைப்பம் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனின் இது போன்ற நாட்களில் துடைப்பம் வாங்கினால் பணவரவு குறைந்து கடன் வாங்குவது அதிகரிக்கும்.
மேலும், சனிக்கிழமைகளில் துடைப்பம் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். இதனால் மகாலட்சுமியின் அருள் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது. அத்துடன் சனி பகவான் கோபம் கொள்வார். இதன் விளைவாக பிரச்சினைகள் உங்களை தேடி வரும்.