குழந்தைகளுக்கு சூட்டக்கூடிய முருகப் பெருமானின் பெயர்கள் !

குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதற்கு பெற்றோர் புதிது புதிதாக முயற்சிக்கிறார்கள். உங்கள் குழந்தைக்கு ஆன்மீகம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை உள்ளடக்கிய பெயர்களை தேடினால், நீங்கள் முருகப் பெருமானின் பெயரை சூட்டுவதன் மூலம் தெய்வீக ஆசீர்வாதம், செழிப்பு மற்றும் வளத்தை பெற முடியும்.

கார்த்திகேயன் என்று போற்றப்படும் முருகன் தமிழ்நாட்டில் மிகவும் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்த கடவுளாக இருக்கிறார். அழகென்றால் அது முருகன் என்று சொல்லும் நாம், ஆண் குழந்தைக்கு ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பெயர்களை சூட்டுவது மிகவும் நன்மைத் தரக்கூடியது, ஒரு குழந்தைக்கு கடவுள் அல்லது தெய்வத்தின் பெயரை சூட்டுவது ஆசீர்வாதத்தையும், நல்ல அதிர்ஷ்டம் மற்றும் தெய்வீக அன்பையும் கிடைக்க் உதவுகிறது.

சக்தி வாய்ந்த தெய்வங்களின் பெயர்களை உங்கள் குழந்தைக்கு சூட்டுவதன் மூலம் குழந்தைக்கு தெய்வங்களின் குணங்களையும் நற்பண்புகளையும் வழங்குவதாக கருதப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு சில அர்த்தமுள்ள பெயர்களை சூட்டலாம்.