பொதுவாகவே மனிதர்களுக்கு பேச்சாற்றல் மிகவும் முக்கியமானது. சேச்சால் எவ்வளவு பெரிய பிரச்சினையையும் சரி செய்துவிடவும் முடியும் அதே நேரம் பெரிய பிரச்சினைகளை உருவாக்கவும் முடியும்.
வார்த்தைகளுக்கு மிகப்பெரும் சக்தி இருக்கின்றது. எனவே அதனை சரியாக பயன்படுத்த வேண்டும்.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் தங்களின் வார்த்தைகளால் பெரிய பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
அப்படி வார்த்தைகளை சரியான இடத்தில் சரியாக பயன்படுத்த தெரியாமல் வாழ்கை முழுவதும் பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களின் ராசி அதிபதியாக செவ்வாய் இரு்பபதால் இவர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் பின்விளைவுகள் பற்றி சிந்திக்காமல் என்ன பேசுகின்றோம் என்பதில் கவனமின்றி வார்த்தைகளை விட்டு பாரிய சிக்கல்களில் மாட்டிக்கொள்ளவார்கள்
இவர்களின் பேச்சு மற்றவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் சற்று முரட்டுத்தனமாக கலந்ததாக இருக்கும். இவர்கள் செய்வது சரி என்ற கருத்து இவர்களின் எண்ணங்களில் பதிந்திருக்கும்.
இவர்களின் இந்த குணத்தால் வெகு விரைவில் மற்றவர்களின் பகையையும், வெறுப்பையும் சம்பாதித்துவிடுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியினர் சூரியனின் ஆதிக்கத்தில் பிறப்பெடுத்தவர்கள் என்பதால், இவர்களின் பேச்சில் எப்போதும் அதிக தன்னம்பிக்கையும், தைரியமும் வெளிப்படும்.
இவர்கள் யாருக்கும் அசச்மின்றி மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசுவார்கள். இவர்களிடம் சற்று தற்பெருமை பேசும் குணம் இருக்கும்.
அவர்கள் தங்களை பற்றி எப்போதும் உயர்வாக பேசிக்கொண்டிருப்பதால், மற்றவர்கள் மத்தியில் தலைக்கணம் கொண்டவராக இவர்கள் அறியப்படுவார்கள்.
அடிக்கடி இவர்களின் பெருமை பேச்சால் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வார்கள். மேலும் இவர்கள் மற்றவர்களின் மனநிலை குறித்து சற்றும் சிந்திக்காமல் பேசும் குணத்தை கொண்டிருப்பார்கள்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள், இவர்கள் தங்களின் சுதந்திரத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள்.
இவர்களின் பேச்சு சற்று வித்தியாசமானதாக இருக்கும். பின்விளைவுகளைப் பற்றி சற்றும் யோசிக்காமல் மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
இவர்களின் இந்த குணம் மற்றவர்களுடன் ஒரு நல்லுறவு பேண முடியாத நிலைக்கு இவர்களை கொண்டு செல்லும்.
மேலும் இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களின் கோபத்தையும், எரிச்சலையும் எளிதில் பெற்றுவிடுவார்கள். அதனால் அதிக துன்பத்தை அனுபவிக்க நேரிடும்.