சரிகமபவில் கடந்த வாரம் One On One சுற்றில் இரு இரு போட்டியாளர்கள் போட்டி போட்ட நிலையில் இதில் மக்கள் வாக்கின் அடிப்படையில் போட்டியை விட்டு வெளியேறிய போட்டியாளர்களின் தகவல் பற்றி பார்க்கலாம்.
பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசை நிகழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் பாடல் திறமைக்கு அடிமையாகாத ரசிகர்களே இல்லை.
சரிகமப ஒவ்வொரு வாரமும் மக்களுக்கு பிடித்த சுவாரஷ்சியமான சுற்றுக்களை கொண்டு வருகிறது. அப்படி தான் இந்த வாரமும் One On One Round நடைபெற்று கொண்டு வருகின்றது. இந்த சுற்றில் இரு போட்டியாளர்கள் போட்டி போட்டு பாடுவார்கள்.
இதில் யார் மிகவும் அருமையாக பாடி நடுவர்கள் மனம் கவர்கின்றனர் என்பதை பொறுத்து ஒரு போட்டியாளர் தெரிவு செய்யப்பட்டு மெடல் அணிவிக்கப்படுவாா்கள்.
இப்படி தெரிவு செய்யப்படும் போட்டியாளருக்கு இரண்டு கோல்டன் மைக் நடுவர்களால் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதில் கோல்டன் பாராட்டு வாங்காத போட்டியாளர்களில் மக்கள் வாக்கையும் சேர்த்து போட்டியை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.
அந்த வகையில் கடந்த வாரம் நடைபெற்ற சரிகமப நிகழ்ச்சியில் கோல்டன் வாங்காத போட்டியாளர்களில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி சென்றனர்.
இவர்கள் மக்கள் வாக்கின் அடிப்படையில் வெளியேற்றப்படுகின்றனர் என்று நடுவர்களால் அறிவிக்கப்பட்டது. அவர்கள் தர்ஷினி மற்றும் லோஹேந்திரன் எனும் இரண்டு போட்டியாளர்களாவர்.