பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கும் மகாலட்சுமி மந்திரம்

வெள்ளிக்கிழமை என்றாலே மகாலட்சுமி தாயார் தான் நினைவிற்கு வருவார்கள். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரை வெள்ளிக்கிழமை தோறும் நம்மில் பலரும் வழிபாடு செய்து கொண்டுதான் வருகிறோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வழிபாடு செய்வோம். அந்த ஒவ்வொரு வழிப்பாட்டிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கும். இன்னும் சிலருக்கு எப்படி வழிபாடு செய்தாலும் அவர்களுடைய பணக்கஷ்டம் தீராத ஒரு நிலையில் இருப்பார்கள்.

அப்படிப்பட்டவர்களும் தங்களுடைய பண பிரச்சினை தீர்வதற்கு பண கஷ்டம் தீருவதற்கும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படவும் செய்ய வேண்டிய ஒரு மகாலட்சுமி பூஜையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். பிரச்சினையை தீர்க்கும் மகாலட்சுமி பூஜை மகாலட்சுமி தாயாருக்கென்று பலவிதமான வழிபாட்டு முறைகளும் பூஜை முறைகளும் இருக்கின்றன.

அதில் எதை செய்தால் நம்முடைய பிரச்சனை தீரும் என்பதும் எப்படி செய்கிறோம் என்பதும் தான் முக்கியம். அப்படி இதுவரை நாம் செய்த எந்த பூஜையும் பலனளிக்கவில்லை என்று நினைப்பவர்கள் முழு மனதோடு மகாலட்சுமி தாயாரை இந்த முறையில் தொடர்ச்சியாக ஐந்து வெள்ளிக்கிழமைகள் வழிபாடு செய்ய அவர்களுடைய பணக்கஷ்டம் தீர்ந்து நிறைவான செல்வத்தை பெறுவார்கள். இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் செய்ய வேண்டும். இதற்கு நாம் முதலில் மகாலட்சுமி தாயாருக்கு நெய்வேத்தியம் தயார் செய்து கொள்ள வேண்டும்.

இந்த நெய்வேத்தியத்தை தயார் செய்வதற்கு என்று ஒரு சிறப்பான வழிமுறை இருக்கிறது. வெல்லம் கரைத்த தண்ணீரில் பச்சரிசியை போட்டு வேகவைத்து சர்க்கரை பொங்கலாக தயார் செய்து பிறகு அதில் பச்சை கற்பூரம், ஏலக்காய், ஜாதி பத்திரி போன்றவற்றை போட்டு வாசனையை அதிகரித்து அதை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். வெல்ல தண்ணீரில் தான் அரிசியை வேக வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக மகாலட்சுமி தாயாரின் படத்தை சுத்தம் செய்து சந்தன குங்குமம் வைத்து வாசனை நிறைந்த மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக பசு நெய்யால் இரண்டு அகல் விளக்கில் தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு லஷ்மி சகஸ்ரநாமம் என்று இருக்கும் அந்த நாமங்களை கூறி மகாலட்சுமி தாயாருக்கு துளசி இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த முறையில் லட்சுமி சகஸ்ரநாமத்தை கூறி துளசி இலைகளால் அர்ச்சனை செய்து சர்க்கரை பொங்கலை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்பவர்களுக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று அவர்களின் வாழ்க்கையில் இருக்கக் கூடிய பணம் தொடர்பான கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் சிறப்பான வாழ்க்கையை பெற முடியும் முடியும்.