வியாபாரத்தில் வளர்ச்சி பெற

கஷ்டப்பட்டு ஒரு தொழிலை செய்யும் பொழுது, அது சிறப்பாக செல்ல வேண்டும் என பலரும் யோசிப்பார்கள்.

சில சமயங்களில் வியாபாரத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படலாம். சுய தொழில் செய்பவர்கள் அதிலிருக்கும் முதலீட்டை விட இலாபம் அதிகமாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

அப்படியானவர்கள் முயற்சியுடன் சேர்த்து இறை நம்பிக்கையும் வைக்கலாம். தொழில் எந்த அளவிற்கு சிறப்பாக நடைபெறுகிறதோ அந்த அளவிற்கு லாபமும் உண்டாகும். அதே போன்று கைக்கு வரக்கூடிய வியாபாரமானது கைநழுவி செல்லக்கூடிய அளவிற்கு போகும் பொழுது துக்கத்தையும் சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும்.

நாம் வியாபாரம் செய்யும் இடங்களில் சில எதிர்மறையான ஆற்றல்கள் அதிகமாக இருப்பின், அது வியாபாரத்திலிருந்து லாபத்தை குறைக்கும்.

அப்படியாயின், வியாபாரத்தில் அதிகப்படியான லாபம் பார்க்க வேண்டும் என்றால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

பரிகாரம் செய்வது எப்படி?
1. கல் உப்பு மகாலட்சுமியின் அம்சங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. கல் உப்பு இருக்கும் இடத்தில் எதிர்மறையான சக்தி இருக்காது என முன்னோர்கள் நம்புகிறார்கள். அதே போன்று வியாபாரத்தில் கண் திருஷ்டியால் ஏற்படும் விளைவுகளை கட்டுபடுத்தும் ஆற்றல் உள்ளது.

2. கல்லுப்பு பரிகாரத்தை செய்வதால் வியாபாரத்தில் உள்ள தடைகள் நீங்கி, லாபம் அதிகரிக்கும்.

3. ஒரு பீங்கான் தட்டு அல்லது கிண்ணத்தில் கல் உப்பை பரப்பி, அதற்கு மேல் மஞ்சள் தூளை தூவி தொழில் செய்யும் இடத்தில் நான்கு மூலையிலும் வைக்க வேண்டும். இதனை வாரத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் புதிதாக மாற்ற வேண்டும். ஏற்கனவே வைக்கப்பட்ட பழைய உப்பை மனிதர்களின் கால்படாத இடத்தில் போட்டு விட்டு, கிண்ணத்தை சுத்தமாக்க வேண்டும்.

4. வெள்ளிக்கிழமை தோறும் தேங்காயில் கற்பூரத்தை ஏற்றி திருஷ்டி சுத்தி உடைப்பதன் மூலமும் தொழிலில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி, லாபம் அதிகரிக்கும்.

5. வெள்ளை குங்கிலியம், பூண்டின் தோல், காய்ந்த அருகம்புல், வெண்கடுகு ஆகிய பொருட்களை கலந்து தூபம் காட்ட வேண்டும். இந்த தூபத்தை தினமும் காட்டும் வியாபார நிலையத்தில் அதிர்ஷ்டம் பொங்கும்.